உக்ரைனின் பயணிகள் தொடருந்தின் மீது ரஷ்யா நடத்திய அதிரடி தாக்குதல்!
உக்ரைனில் பயணிகள் தொடருந்து மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, பிற பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பேச்சுவார்த்தை
ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக போர் நடந்து வருகின்றது.
இந்தநிலையில், உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய படைகள், பல பகுதிகளை கைப்பற்றியுள்ளதுடன் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
அத்தோடு, அண்மையில் முதல்முறையாக ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்தப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
ட்ரோன் தாக்குதல்
இந்தநிலையில், கார்கிவ் பகுதியில் 200 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தொடருந்து மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில், தொடருந்து பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஐந்து பேர் உடல் கருதி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, இது ரஷ்யாவின் பயங்கரவாத தாக்குதல் என குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எந்தவொரு நாட்டிலும், பொதுமக்கள் செல்லும் தொடருந்து மீது ட்ரோன் தாக்குதல் நடத்தினால் அது பயங்கரவாதமாகவே கருதப்படும்.
இதில் எந்தவிதமான இராணுவ நோக்கமும் இருக்கவும் முடியாது” என தெரிவித்துள்ளார்.
மேலும், தெற்கு நகரமான ஒடேசாவில் ரஷ்யா நடத்திய 50 இற்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |