உக்ரைனில் உள்ள வணிக வளாகத்தின் மீது ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதல்: 5 பேர் பலி
உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பாவ்லோஹ்ராட் நகரில் வணிக வளாகமொன்றின் மீது ரஷ்ய ட்ரோன் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர்.
மக்கள் அதிகளவில் நடமாடிக் கொண்டிருந்த பகுதியொன்றில் பகல் வேளையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதலில் வணிக வளாகம் மட்டுமன்றி, பல வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
உக்ரைன் உள்துறை அமைச்சர்
தாக்குதல் இடம்பெற்றபோது பாவ்லோஹ்ராட் நகரின் பிரதான வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த 67 பேரில் 8 சிறுவர்களும் அடங்குவதாக பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
வணிக வளாகங்களுக்கு அருகில் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை இலக்காகக் கொண்டு ரஷ்யா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வணிக வளாகங்கள்
இந்தத் தாக்குதலை உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் அன்ட்ரி சிபிஹா, உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கும் ரஷ்யாவின் உத்தி எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் “பொதுமக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்துவதன் மூலம் உக்ரைன் மக்களை சோர்வடையச் செய்து, சலுகைகளை வழங்குவதற்கு உக்ரைனை கட்டாயப்படுத்தலாம் என குறிப்பிட்டிருந்தார்.
டினிப்ரோ நகருக்கு அருகிலுள்ள முக்கிய விநியோக மையமாக விளங்கும் பாவ்லோஹ்ராட், இதற்கு முன்னரும் ரஷ்ய தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது. கடந்த மாதம் அங்குள்ள களஞ்சியத் தொகுதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்திருந்தனர்.
இதேவேளை, இந்த வாரத்தில் சபோரிஷியா மற்றும் சுமி நகரங்களில் உள்ள இரு வணிக வளாகங்களும் ரஷ்ய வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன.
திங்கட்கிழமை சபோரிஷியாவில் உள்ள வணிக வளாகமொன்று கடுமையாக சேதமடைந்த போதிலும், அது மூடப்பட்டிருந்ததால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26