கோட்டாபயவின் புத்தகம் : ரஷ்ய தூதரகம் எழுப்பிய கேள்வி
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் புதிய புத்தகம் தொடர்பில் கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம் கேள்வியை எழுப்பியுள்ளது.
இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ரஷ்ய தூதரகம்,
இலங்கை இராணுவ தலைமையகத்திற்கு வெளிநாட்டுத் தூதுவர்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முன்னாள் அதிபரின் யோசனை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
ரஷ்ய தூதரகம் எழுப்பிய கேள்வி
கோட்டாபய ராஜபக்சவின் புதிதாக வெளியிடப்பட்ட புத்தகத்தைப் பற்றி பத்திரிகைகளில் வெளியானதை கவனித்தோம்.அங்கு வெளிநாட்டு தூதர்கள் சிறிலங்கா இராணுவ முகாம்களுக்கு வருகை தருவது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
Took notice of publications in SL press about the freshly launched book by G.Rajapaksa, where it’s suggested that foreign ambassadors’ visits to SL military objects should be restricted.
— Russian Embassy in Sri Lanka (@RusEmbSriLanka) March 8, 2024
Then it needs clarification, the diplomatic representatives of which countries are meant? ?️♂️ pic.twitter.com/KdCqjHZOn9
இந்த கட்டுப்பாடு எந்தெந்த நாடுகளின் இராஜதந்திர பிரதிநிதிகளுக்கு என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என ரஷ்ய தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |