பொதுமக்களின்33 வாழ்விட பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதல்
people
russia
ukraine
invasion
settelment
By Sumithiran
ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள பொதுமக்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரேனிய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“ரஷ்யா, பொதுமக்கள் வாழும் பகுதிகளைத் தாக்கவில்லை என்று கூறுகிறது. ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் பொதுமக்கள் வாழும் 33 பகுதிகள் தாக்கப்பட்டுள்ளன,” என்று வாடிம் டெனிசென்கோ ரொய்ட்டர்ஸ் செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை படையெடுப்பு தொடங்கியதிலிருந்து உக்ரைனின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள பல முனைகளில் இருந்து ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி, தலைநகர் கீவ்வை அடைந்துள்ளன.
ரஷ்ய படைகள் ஏற்கனவே தலைநகரில் இருப்பதாக உக்ரைனிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில், உள்ளூர் மக்கள் ரஷ்ய படையினர் மீது பெற்றோல் குண்டுகளை பயன்படுத்தி எதிர்க்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்