உக்ரைன் தொலைக்காட்சி கோபுரம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்(photo)
உக்ரைன் தலைநகர் கீவ்-இல் உள்ள மிக உயரமான தொலைக்காட்சி கோபுரம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
முன்னதாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உக்ரைனிய தலைநகரில் உள்ள இலக்குகளை தாக்க தயாராகி வருவதாக கீவ் குடியிருப்பாளர்களை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், உக்ரைனுக்குள் புகுந்து உக்ரைனிய தலைநகர் கீவ் மற்றும் கார்கில் நகரை ரஷ்ய படைகள் குறித்து வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைன் தலைநகர் கீவ்-இல் உள்ள உலகின் 2-வது உயரமான தொலைக்காட்சி கோபுரம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் அன்டன் ஹெராஷ்செங்கோ கூறியுள்ளார்.
இதேவேளை ஹோலோகாஸ்ட் நினைவிடம் அருகே தொலைக்காட்சி கோபுரத்தைத் தாக்கிய ரஷ்யாவின் செயல் 'காட்டுமிராண்டித்தனமானது' என்று உக்ரைனிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாஜியின் ஹோலோகாஸ்ட் காலத்தில் யூதர்கள் பெருமளவில் திரளாக கொல்லப்பட்ட மிகப்பெரிய இடமாக இருப்பது பேபின்யார். இந்த நினைவு கூரும் இடத்துக்கு அருகே தொலைக்காட்சி கோபுரம் உள்ளது. அதைத்தான் ரஷ்ய படையினர் தாக்கியுள்ளனர்.
Russian troops fired on the TV tower, near the Memorial complex #BabynYar.
— MFA of Ukraine ?? (@MFA_Ukraine) March 1, 2022
Russian criminals do not stop at anything in their barbarism. Russia = barbarian. pic.twitter.com/MMJ6wSfpsS
