உணவு,எரிபொருள் இன்றி தவிக்கும் ரஷ்ய படைகள் -பென்டகன் வெளியிட்ட தகவல்
உக்ரைனில் ரஷ்ய இராணுவம் உணவு, எரிபொருள் இன்றி தவித்து வருவதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் கெர்பி கூறுகையில்,
மேலை நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தொடர்ந்து ரஷ்ய படைகளுடன் போர் புரிந்து வருவதாகவும் மூன்றாவது வாரத்தில் ரஷ்யாவுக்கு உக்ரைன் படைகள் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யப் படைகள் தற்போது உணவுப் பஞ்சத்தால் தவித்து வருவதாகவும் மேலும் அவர்களது வாகனங்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், ரஷ்யப் படைகள் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக கூறியுள்ளார்.
தெற்கு உக்ரைன் பகுதியில் உள்ள கெர்சன் மற்றும் மெலடிபோல் ஆகிய நகரங்களை தவிர மற்ற நகரங்களில் கடுமையாக போராடியும் ரஷ்யப் படைகளால் ஊடுருவ முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
