வீழ்ந்து நொருங்கியது ரஷ்யாவின் தாக்குதல் ஹெலிகொப்டர்
Russo-Ukrainian War
Russian Federation
Belarus
By Sumithiran
நட்பு நாடான பெலாரஸில் ரஷ்யாவின் எம்ஐ-24 தாக்குதல் ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனை பெலாரஸ் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இன்று (ஜூன் 22) பிற்பகலில்,எம்ஐ -24 ஹெலிகொப்டர் பெலாரஸில் "கடினமாக தரையிறங்கியது".என பெலாரஸ் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
உயிரிழப்பு இல்லை
அமைச்சின் கூற்றுப்படி, இந்த சம்பவத்தில் பணியாளர்கள் காயமடைந்தனர், தரையில் சேதமோ அல்லது உயிரிழப்புகளோ இல்லை. சம்பவத்திற்கான காரணங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ அறிக்கையில் யாருடைய ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது என்பதைக் குறிப்பிடவில்லை.
