ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரையும் விட்டு வைக்காத புடின்: சீறி பாய்ந்துள்ள ஏவுகணை!
மத்திய உக்ரைனிய நகரமான Kryvyi Rih இல் உள்ள அடுக்குமாடி கட்டிடமொன்றுக்கு ரஷ்யா பலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 15 படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான குறித்த இடத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது குறித்த தாக்குதலை நடத்தியமைக்கு அந்நாட்டு அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஏவுகணைத் தாக்குதல்
Kryvyi Rih என்பது போருக்கு முந்தைய காலப்பகுயில், மக்கள்தொகை 600,000 ஐக் கொண்ட ஒரு பிரதான நகரமாகும்.
அதன் தெற்கு புறநகர்ப் பகுதிகள் அருகிலுள்ள ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதியிலிருந்து 40 மைல்கள் (65 கிமீ) தொலைவில் உள்ளதால், போர் முழுவதும் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றதாகவும் கூறப்படுகிறது.
முடிவில்லாத ரஷ்ய தாக்குதல்
இந்த நிலையில், உலகின் மற்ற நாடுகள் கிறிஸ்துமஸ் கொண்டாடும் வேளையில், உக்ரைனியர்கள் முடிவில்லாத ரஷ்ய தாக்குதல்களால் தொடர்ந்து அவதிப்படுவதாக அந்நாட்டு பிரதிநதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஷ்யா ஒரே இரவில் 60 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயன்றுள்ள நிலையில், அதில் 36 சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் 23 எலெக்ட்ரானிக் ஜேமர்கள் மூலம் இடைமறிக்கப்பட்டதாகவும் உக்ரைன் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |