ஹமாஸ் ஏவுகணையை தேடி அழித்த இஸ்ரேல்: வெளியிடப்பட்ட காணொளி
நிலைநிறுத்தப்பட்டிருந்த ஹமாஸ் ரொக்கெட் ஏவுகணையொன்றை சிறிது நேரத்திற்கு முன்பு போர் விமானங்களால் தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) அறிவித்துள்ளது.
காசா நகரின் ஷாதி முகாமில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடத்திற்கு அருகில் நிலைநிறுத்தப்பட்ட ஹமாஸ் ரொக்கெட் ஏவுகணையே இவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அப்பகுதியில் உள்ள பொதுமக்களை வெளியேறுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னரே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
IDF காணொளி
இது தொடர்பில், IDF ஆல் வெளியிடப்பட்ட காட்சிகள் தாக்குதலை தொடர்ந்து ஒரு ரொக்கெட் தளத்திலிருந்து வெளியேறுவதைக் காட்டுகிறது.
מטוסי קרב של חיל האוויר תקפו לפני זמן קצר אתר שיגור של ארגון הטרור חמאס שמוקם בסמוך למבנה של האו״ם במרחב שאטי שבצפון הרצועה.
— צבא ההגנה לישראל (@idfonline) December 24, 2024
התקיפה בוצעה לאחר פרסום הודעה הקוראת לפינוי אוכלוסיה ממרחב המטרה לשם הגנתה, לאחר התקיפה זוהתה רקטה היוצאת ממתחם השיגור>> pic.twitter.com/3cwcneEMtI
இதேவேளை, வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அல்-நஸ்லாவில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேலிய தாக்குதல் நடத்தியதில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |