உக்ரைனை வென்றுவிட்டதாக கட்டுரை வெளியிட்ட ரஷ்ய அரச ஊடகம்
media
russia
delete
victory
invasion
By Sumithiran
உக்ரைனை ரஷ்யா வென்றுவிட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனம் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அந்த கட்டுரையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் பிரச்சினையை தீர்த்து வைத்துவிட்டதாவும், இராணுவ நடவடிக்கை மூலமாக உக்ரைன் ரஷ்யாவிடம் மீண்டும் வந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான ஆர்ஐஏ நொவஸ்டி என்ற செய்தி நிறுவனத்தில் இந்த கட்டுரை கடந்த 26-ம் திகதி வெளியாகியுள்ளது.
புதிய உலகில் ரஷ்யாவின் வருகை என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த கட்டுரையில் உக்ரைனை வெற்றிகொண்டு ரஷ்யாவுடன் இணைத்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
சண்டை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த கட்டுரை குறித்து சமூகவலைதளத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இதனை தொடர்ந்து அந்த கட்டுரையை ரஷ்ய செய்தி நிறுவனம் தங்கள் இணையதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது.
