உக்ரைனில் ரஷ்ய படையினரின் கொடூரம் - 30 குதிரைகள் உயிருடன் எரித்து கொலை
உக்ரைனில் படையெடுப்பை மேற்கொண்டுவரும் ரஷ்ய படைகள் மோசமான தாக்குதலை நடத்திவருகின்றன.
இதில் நாளாந்தம் மக்களின் உயிரிழப்பு தொடர்வதுடன் பாரிய சொத்தழிவுகளும் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் மனிதர்களை மட்டுமல்லாது மிருகங்களையும் அவர்கள் கொன்றொழித்து வருகின்றனர். இதன்படி உக்ரைனின் ஹாஸ்டமெல் என்ற நகரில் ஒரு குதிரை லாயத்துக்குள் புகுந்த ரஷ்யப் படையினர் அதை தீவைத்துக் கொளுத்தி விட்டனர். இதில் அந்த லாயத்தில் கட்டப்பட்டிருந்த 30 குதிரைகளும் பரிதாபமாக தீயில் கருகி இறந்து விட்டன.
மனித உரிமை அமைப்புகள் இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளன. கீவ் நகருக்கு வடக்கே இந்த ஹாஸ்டமெல் நகரம் உள்ளது. இங்கு புகுந்த ரஷ்யப் படையினர் அங்கிருந்த குதிரை லாயத்தை தீவைத்துக் கொளுத்தினர். இதில் லாயத்தில் கட்டப்பட்டிருந்த 30 குதிரைகளும் தீயில் கருகி உயிரிழந்து விட்டன. 2 குதிரைகள் மட்டும் உயிர் பிழைத்து தப்பி ஓடின.
இந்த குதிரை லாயம் அலெக்சான்ட்ரா என்ற பெண்ணுக்குச் சொந்தமானது. இந்த சம்பவம் குறித்து அலெக்சான்ட்ரா கூறுகையில் போர் தொடங்கியதுமே எனது வீடு மற்றும் லாயத்தை ரஷ்யப் படையினர் ஆக்கிரமித்து விட்டனர். என்னை வீட்டை விட்டு போகுமாறும் மிரட்டினர். போகாவிட்டால் சுட்டுக் கொன்று விடுவதாகவும் மிரட்டி வந்தனர்.
இந்த நிலையில் லாயத்துக்கு தீவைத்து குதிரைகளைக் கொன்றுள்ளனர். பெரும்பாலான குதிரைகளுக்கு 7 முதல் 10 வயது இருக்கும் என்றார் அலெக்சான்ட்ரா.
