நேட்டோ வழங்கிய ஆயுதத்தால் ரஷ்ய இராணுவ தளத்தை நிர்மூலமாக்கிய உக்ரைன் படை (காணொளி)
உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய படைகளை அழிப்பதற்கு நேட்டோ அமைப்பு ஆயுத விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.
இவ்வாறு நேட்டோ அமைப்பு வழங்கிய ஆயுதம் ஒன்றின் உதவியுடன் ரஷ்ய இராணுவத் தளம் ஒன்றை உக்ரைன் படையினர் சிதறடிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
நேட்டோ வழங்கிய howitzer என்னும் ஆயுதத்தின் உதவியாலேயே, 20 கிலோமீற்றர் தொலைவுக்கப்பால் இருந்து தாங்கள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு 20 கிலோமீற்றர் தூரத்திலிருந்து வீசப்பட்ட குண்டு, ரஷ்ய இராணுவத் தளத்தை துல்லியமாக தாக்கியதில், ரஷ்ய இராணுவத்துக்குச் சொந்தமான SUV வாகனம் ஒன்று அழிக்கப்பட்டதுடன், ரஷ்யப் படையினர் பலரும் கொல்லப்பட்டுள்ளார்கள்.
நேட்டோ அமைப்பு உக்ரைன் படையினருக்கு ஆயுதங்களை வழங்க தொடங்கியிருப்பது யுத்தத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா
