ரஷ்ய - உக்ரைனிய போர் - இலங்கைக்கு ஏற்பட்டுள்ள உடனடி தாக்கம்
இந்த ஆண்டு இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் சுமார் 24% பேர் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வந்தவர்கள் என புள்ளிவிபர தகவல்கள் தெரிவித்தன.
2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலாத்துறையின் உத்தியோகபூர்வ தகவல்கள் மூலம் இந்த விபரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் வரும் காலத்தில் எதிர்பார்த்தபடி, இலங்கைக்கு வரும் உக்ரைனிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ரஷ்யாவிலிருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறையும் என தெரிவிக்கப்படுகிறது.
உல்லாசப்பயணிகளின் மீள் வருகையை அதிகரிக்க இலங்கை அரசாங்கம் பகீரத பிரயத்தனம் செய்து வரும் நிலையில் ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு இலங்கைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

