15 நாட்களில் உக்ரைனை பிடிக்க திட்டம் - ரஷ்யாவின் இரகசிய ஆவணங்கள் அம்பலம்
15 நாட்களுக்குள் உக்ரைன் முழுவதையும் பிடிக்க ரஷ்யா திட்டமிட்டிருந்தது இரகசிய ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 10வது நாளாக போர் தொடுத்து வருகிறது. கெர்சன் நகரை கைப்பற்றிய ரஷ்ய படைகளுக்கு தலைநகர் கீவை கைப்பற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷ்ய படைகளுக்கும் துப்பாக்கி சண்டை நடக்கிறது.உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, மீட்பு பணிக்காக உக்ரைனின் 2 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுப்பது தொடர்பாக ரஷ்யாவின் திட்டங்கள் எப்போது அனுமதிவழங்கப்பட்டது என்ற தகவல் இரகசிய ஆவணங்கள் மூலம் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கான திட்டங்கள் ஜனவரி 18 அன்று அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. பெப்ரவரி 20 முதல் மார்ச் 6ம் திகதி வரை 15 நாட்களுக்குள் உக்ரைனை பிடிக்கும் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ரஷ்யாவின் இரகசிய போர் ஆவணம் ஒன்றில் கூறப்பட்டு உள்ளது.
