ரஷ்யாவின் அதிரடி தாக்குதல்கள்! தீப்பற்றிய ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு ஆலை - இறுகும் போர்க்களம் (நேரலை)
உக்ரைய்னில் அமைந்துள்ள ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான சபோரிஜியா( Zaporizhzhia )அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஸ்ய படையினரின் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாகவே இந்த அணுமின் நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தீயணைப்பு படையினருக்கு ஆலையின் அருகில் செல்ல முடியவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து ரஸ்ய படையினர் குறித்த ஆலை பிரதேசம் மீது நடத்தும் தாக்குதல்களை நிறுத்தவேண்டும் என்று சர்வதேச அணுசக்தி நிறுவனம் கோரியுள்ளது.
உக்ரையின் தென்கிழக்கு புறநகரில் இந்த ஆலை அமைந்துள்ளது. இது உக்ரைய்னின் 25 வீத மின்சார உற்பத்திக்கு உதவி வருகிறது.
உக்ரைனில் சபோரிஜியா உட்பட நான்கு அணு உலைகள் உள்ளன.
ஆக்கிரமிப்பின் பின்னர் தற்போது ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள செர்னோபில் போன்ற தளங்களில் உள்ள அணுக்கழிவுகளையும் சபோரிஜியா கையாள்கிறது.
