ஜூன் மாத இறுதிக்குள் அரசியல் சீர்திருத்தம், சர்வதேச உதவி!!
ஜூன் மாத இறுதிக்குள் அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கும் சர்வதேச சமூகத்தின் உதவிகளைப் பெறுவதற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன இன்று தெரிவித்தார்.
கட்சி செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே விஜேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
21வது திருத்தம்
“அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாடாளுமன்றத்தை பலப்படுத்தும், 15 குழுக்களை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது இந்த குழுக்களில் போராட்டம் நடத்துபவர்களும் இடம் பெறுவார்கள். தேசத்தின் இளைஞர்கள் இந்த செயல்முறையின் மூலம் அரச நிர்வாகத்தில் பங்கு வகிக்க முடியும்.
பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது ஒரு முக்கியமான காரணி என்று சிலர் வாதிடுகின்றனர். இருப்பினும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் இரண்டும் ஒரே மாதிரியானவை என்பது அவர்களுக்குத் தெரியாது.
ஜூன் மாத இறுதிக்குள் தீர்வு
அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவரவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வெளிநாட்டு உதவிகளைப் பெறவும் பிரதமர் முயற்சி எடுத்து வருகிறார்.
ஜூன் இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற நன்கொடை நிறுவனங்களிடமிருந்து உதவியைப் பெற அவர் முயற்சி செய்கிறார்", எனக் குறிப்பிட்டார்.
