கிரிக்கெட் ஊழலுக்கு அதிபர் தேர்தலுக்குள் முடிவு
நாட்டில் இடம்பெறும் கிரிக்கெட் மோசடிகள் மற்றும் ஊழல்கள் அடுத்த அதிபர்த் தேர்தலுக்குள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி விகாரைகளுக்கு இன்று (15) சென்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் அதிபர்த் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவது குறித்து எழுப்பட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.
அதிபர்த் தேர்தல்
அத்தோடு, கிரிக்கெட்டில் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளை கைவிட்டு விட்டீர்களா என எழுப்பப்ட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
அதன்போது, “என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன். அது முடியாவிட்டால் அதிபர்த் தேர்தலோடு இது முடிவுக்கு வரும், விளையாட்டு ஊழல் மட்டுமல்ல மற்ற ஊழல்களும் அதிபர்த் தேர்தலோடு நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |