மீண்டும் இனவாதத்தை தூண்டும் ஞானசார தேரர்: கடும் எச்சரிக்கை விடுத்த சாணக்கியன் எம்.பி
கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்த கருத்துக்களை கடுமையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (19) திருகோணமலைக்கு சென்று வடக்கு மற்றும் கிழக்கு விசேடமாக திருகோணமலை தமிழ் மக்களுக்கே சொந்தமானது என தெரிவித்திருந்தார்.
அத்தோடு, பௌத்த சின்னங்களை அங்கு வைப்பதற்கு தடையாக இருக்கும் சாணக்கியனுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுப்பதாகவும் இவரை போல பலரை சந்தித்துள்ளதாகவும் மற்றும் எவ்வித காரணத்திற்காகவும் எமது செயற்பாடுகளை நிறுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
பூர்வீக தமிழர்கள்
இந்தநிலையில், ஞானசார தேரரின் கருத்துக்கு சாணக்கியன் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சாணக்கியன் “எமது தமிழர் தாயகத்தினை ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது.
பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அடாவடித் தனங்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிப்பதோடு இச் செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு இனியும் இருக்க மாட்டோம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இவ்வாறான இனத் துவேஷ செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 21 மணி நேரம் முன்