கிரிக்கெட் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகராக சேவையாற்றவில்லை : தேஷபந்து தென்னகோன் தெரிவிப்பு
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகராக தாம் சேவையாற்றவில்லை என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகராக தேஷபந்து தென்னகோன் சேவையாற்றியமை தொடர்பில் சமூக ஊடகங்களில் அண்மை நாட்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், குறித்த செய்தியை நிராகரித்த தேஷபந்து தென்னகோன், தாம் பாதுகாப்பு ஆலோசகர் பதவியை ஏற்கவில்லை என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு ஆலோசகர்
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பதவியை ஏற்குமாறு கடந்த 2021 ஆம் ஆண்டு தம்மிடம் கோரப்பட்டதாக தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை உள்ளடக்கிய ரணிலின் வரவு செலவு திட்டம் : பவித்ரா வன்னியாரச்சி சுட்டிக்காட்டு
இதனை தொடர்ந்து, குறித்த கடிதம் தொடர்பில் தாம் அப்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸை அறியப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பதவியை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், அது தொடர்பில் நிறுவனத்தை அறியப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இது தொடர்பான கடிதமொன்றையும் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவருக்கு தாம் அனுப்பியதாக தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமையவில்லை : ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு
சமூக ஊடகங்கள்
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை எனவும் தாம் ஒருபோதும் கிரிக்கெட் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகராக சேவையாற்றவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கிரிக்கெட் நிறுவனத்தின் எந்தவொரு சலுகையையும் தாம் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
SHOCKING SECRET: Sri Lanka Cricket contracted current Senior DIG Deshabandu Tennakoon for a secret consultancy role. Pay LKR 150,000 + 200 litres of petrol, and LKR 5K for calls in addition to laptop. Secrecy is paramount. Share on bonus, increments included! pic.twitter.com/KMV90bsJgT
— Ranga Sirilal (@rangaba) November 13, 2023