அதிபராக கோட்டாபய : முடிவை மாற்றியிருப்பர் சஹ்ரான்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கோட்டாபய ராஜபக்ச, நாட்டின் அதிபராக வருவார் என சஹ்ரான்கள் அறிந்திருந்தால் அவரை கட்டிப்பிடித்து, சஹ்ரான்கள் மரணமடைந்திருப்பர் என்று சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்தார் .
கினிகத்தேன கூட்டுறவு கூட்ட மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மைத்திரியின் பகிடி
மக்கள் பிரச்சினை தொடர்பில் நாமல் ராஜபக்சவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, சஜித் பிரேமதாஸவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாடாளுமன்றத்தில் உள்ள எமது தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களை தவிர, யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.
தொலைக்காட்சியில் வரும் போது மைத்திரிபாலவின் பகிடிகளை பாருங்கள். அவர் தனது கட்சியின் பிரச்சினைகளை மட்டுமே பேசுகிறார். நாட்டின் பொருளாதாரம், உணவுப் பிரச்சினை, மருந்துப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை என்றார்.
நாமல் ராஜபக்சவிடம் நல்ல பதில்கள்
இந்நாள்களில் சனல் 4 காணொளியை தவிர மற்ற சனல்கள் மூடப்படுகின்றன. பொருட்களின் விலைக்கு சனல் இல்லை; எரிபொருளுக்கு சனல் இல்லை; பேருந்து கட்டணத்திற்கு சனல் இல்லை; மக்கள் பிரச்சினைகளை எந்த சனல்களும் பேசுவதில்லை. தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி பேசுவதில்லை என்றும் குறிப்பட்டார்.
சனல் 4வை பிடித்துக் கொண்டு அரசியல் ரீதியாக தொங்கிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு நாமல் ராஜபக்சவிடம் நல்ல பதில்கள் உள்ளன. கோட்டாபய ராஜபக்சவை பதவிக்கு கொண்டு வர யாராவது தற்கொலை செய்து கொள்வார்களா என்று கேட்கின்றார். தங்களுடைய மரணங்களால்தான் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வருவார் என்று மரணித்த சஹ்ரான்களுக்கு தெரிந்திருந்தால், தாங்கள் மட்டும் சாக மாட்டோம் என்று கோட்டாபய ராஜபக்சவை கட்டிப்பிடித்து மரணித்து இருப்பார்கள் என தெரிவித்தார்.
பின்னர் அவர்கள் நாட்டு நலனுக்காக இறக்கிறார்கள் என்று சொன்னால், அதுதான் அரசியல் தந்திரங்கள்; அரசியல் விளையாட்டுகள் என்று பழைமையானவர்கள் கூறுகின்றனர்.
இது இவ்வளவு கேவலமான
நாடு; பதவிக்கு வருவதற்கு
இன பேதங்களை உருவாக்கி,
கேவலமான அரசியல்
செய்கின்றனர். குறைந்த பட்சம்
அவர்களுக்கு வருத்தம் இல்லை;
வெட்கம் இல்லை; மனசாட்சி
இல்லை. இந்த நாடு செல்லும்
வழியை நிறுத்த வேண்டுமா
இல்லையா? என்று கேட்பவர்கள்
முதலில் இந்த அரசியல் அமைப்பை
மாற்ற வேண்டும் என்கின்றனர்
என்றும் சுனில் ஹந்துநெத்தி
தெரிவித்தார்.