பெறுமதி சேர் வருமானத்தை ஈட்ட மாற்று வழிகளை விளக்கும் எதிர்கட்சி தலைவர்!
பெறுமதி சேர் வருமானத்தை ஈட்ட மாற்று வழிகளை விளக்க தயாராக இருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அண்மையில், இலங்கை அரசானது மூன்றாவது முறையாக மின்சார கட்டணத்தை உயர்த்திய சில நாட்களில் பெறுமதி சேர் வரியை 18% ஆக உயர்த்தியுள்ள நிலையில், மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டாறு குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் மயம்
மேலும் அவர் அறியத்தருகையில்,
“VATக்கு பதிலாக, தற்போதைய வரி வசூல் முறை அல்லது வரி நிர்வாகமானது மிகவும் வினைத்திறன் மிக்கதாக மாற்றப்பட வேண்டும்.
வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கு டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும்.
கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் மக்களிடம் இருந்து சரியான முறையில் வரி வசூலிக்கப்பட வேண்டும்.
வரிச்சலுகைகள்
வரி ஏய்ப்பு செய்பவர்கள் மற்றும் சில நட்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் தேவையற்ற வரிச்சலுகைகள் நீக்கப்பட வேண்டும்.
இந்த முறைகளின் மூலம் அரசு எதிர்பார்க்கும் வரி வருமானம் சாமானிய மக்கள் மீது அழுத்தம் கொடுக்காமல் இருக்க உதவும்.” என்றார்.