சிறிலங்கா அதிபர் தேர்தல் களத்தில் சஜித்
தற்போது வெற்றிடமாக உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட சிறிலங்கா அதிபர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
I am contesting to be the President. Electorate is confined to 225 MPs with the GR coalition dominating the numbers. Even though it is an uphill struggle I am convinced that truth will prevail.
— Sajith Premadasa (@sajithpremadasa) July 15, 2022
225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதையும், பெரும்பான்மையை கோட்டாபய ராஜபக்ச தரப்பினர் வைத்திருப்பதையும் இது காட்டுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தெரிவிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் நாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது.
அதிபர் பதவிக்காக பல வேட்பாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் பதவிக்கு தான் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.