சஜித் பிரேமதாச வைத்தியசாலையில் அனுமதி!
SJB
Sajith Premadasa
Sri Lankan protests
Sri Lanka Anti-Govt Protest
By Kanna
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைரஸ் காய்ச்சல் காரணமாக அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க இருந்தனர்.
இந்நிலையில், சஜித் தற்பொழுது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறிருக்க, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்