எதிர்க்கட்சித் தலைவர் பதவி கைமாறும் நிலை!!
Sajith Premadasa
Sri Lanka
Samagi Jana Balawegaya
Sri Lankan political crisis
By Vanan
புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து, சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர தீர்மானித்துள்ளது.
இந்த நிலைமையால் சஜித் பிரேமதாசவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி நீக்கப்பட உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, புதிய எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியை ஏற்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பல தடவைகள் கோரிய போதிலும், பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து அவர் அதனைத் தவிர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்