இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த சஜித்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளனர்.
இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்திற்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை புதுடில்லியில் சந்தித்தார்.
கருத்துப் பரிமாற்றம்
இந்திய- இலங்கை கூட்டாண்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை தொடர்புகள் மற்றும் பரஸ்பர முன்னேற்றம் தொடர்பில் இரு தரப்பினரின் அர்ப்பணிப்புகள் தொடர்பில் பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டுமொரு முறை, மீண்டெழுந்து நிற்பதற்குத் தேவையான பயன்பெறும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்தியா பெற்றுத் தந்தமைக்கு தலையீடு செய்தமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் நீண்டகால பொருளாதார மறுமலர்ச்சியைத் திட்டமிடுவதற்காக இன்றைய காலத்தைப் பயன்படுத்துவது குறித்து பல கருத்துக்களை எஸ். ஜெய்சங்கர் இதன்போது முன்வைத்தார்.
IMF வேலைத்திட்டத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் எதிர்பார்க்கப்படும் சவால்களையும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
சமுத்திர, விமான இணைப்புச் சேவைகள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள இரு நாடுகளிடையேயான மின்சார இணைப்புக் கட்டமைப்பின் இடைத் தொடர்புகள் உள்ளிட்ட முக்கிய ஒத்துழைப்பு முயற்சிகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு மதிப்பாய்வு செய்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

