நாட்டு மக்களுக்கு அநியாயம் இழைக்க வேண்டாம்! எதிர்க் கட்சித் தலைவர் கோரிக்கை
உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்காத கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஒத்திவைப்புப் பிரேரணையின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்காத தடுப்பூசிகளை எவ்வாறு வழங்க முடியும் என்பது தொடர்பில் அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு அநியாயம் இழைக்க வேண்டாம் என சுகாதார அமைச்சரிடம் எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கிய தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்