சஜித்தின் யாழ். வருகை - பல்வேறு பகுதிகளில் நாளை பிரச்சார கூட்டங்கள்
ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச யாழ்ப்பாணதிற்கு நாளையதினம்(23) வருகை தரவுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது அவர் பல்வேறு நிகழ்சிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் பங்கேற்வுள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட அமைப்பாளர் எஸ்.விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், “நாளை(23) காலை 10 மணிக்கு அனலைதீவிலும் மாலை 2 மணிக்கு சண்டிலிப்பாயிலும் மாலை 4 மணிக்கு வட்டுக்கோட்டை மூளாயிலும் மாலை 5 மணிக்கு அளவெட்டி கும்பலையிலும் மாலை 06.30 மணிக்கு றக்கா வீதியில் அமைந்துள்ள இளங்கதிர் சனசமூக நிலைய விளையாட்டுத் திடலில் இடம்பெறவுள்ள பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
பொதுக்கூட்டம்
சர்வ மதத் தலைவர்களையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) காலை 9.30 நாச்சிகுடா சந்தி
10.30 மணிக்கு கிளிநொச்சியிலும் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்திலும் பங்கேற்வுள்ளார்.” என தெரிவித்தார்.
