பொய்யும் மோசடியும் நிறைந்த அரசாங்கம் - கைகோர்க்க மனசாட்சியுள்ள எவராலும் முடியாது!
"இருநூற்றி இருபது இலட்சம் மக்களுடன் நிற்பதா அல்லது நாட்டை அழிக்கும் மொட்டு நிழல் அரசாங்கத்துடன் நிற்பதா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.
பொய்யும் மோசடியும் நிறைந்த அரசாங்கத்துடன் கைகோர்க்க மனசாட்சியுள்ள எவராலும் முடியாது."
இவ்வாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சஜித் - காட்டம்
மேலும் அவர்,
"இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரும், குடும்பத்தினரும் நாடாளுமன்றத்திற்கு வரமுடியாத போதிலும்,நேற்றைய தினம் சட்டவிரோதமாக நடந்து கொண்ட ஒரு பொது மக்கள் பிரதிநிதிக்கு நாடாளுமன்றத்திற்கு சமூகமளித்து வாக்களிக்கும் தகுதி வழங்கப்பட்டுள்ளது.
மின்கட்டணம் அதகரிக்கப்பட்டுள்ள விதம் முற்றிலும் தவறானது.
ஆணைக்குழுவின் உத்தரவிற்கு அமைவாக அமைச்சரவை எவ்வாறு விலையை அதிகரித்தது என்பதை விளக்க வேண்டும்.
இதற்கு எதிராக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சட்ட நடவடிக்கை எடுத்தார்."
இவ்வாறு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவி நீக்கம் தொடர்பான இன்றைய (24) நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 18 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்