விவசாயத்தைக் கட்டியெழுப்பினால் நாடு முன்னேறும்: சபையில் சுட்டிக்காட்டிய சஜித்
நாம் ஒரு நாடாக மீண்டும் எழுந்து நிற்க வேண்டுமானால் விவசாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa)தெரிவித்துள்ளார்.
2025 வரவு செலவு திட்ட கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (12.03.2025) உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“தேசிய விவசாய கொள்கையொன்றும், நில பயன்பாட்டுத் திட்டமொன்றும் கட்டாயம் வகுக்கப்பட வேண்டும்.
நாட்டின் வளர்ச்சி
பண்டைய காலம் தொட்டு, பல நூற்றாண்டுகளாக, பன்நெடுங்காலமாக எமது நாட்டில் முன்னேற்றம் கண்ட விவசாயமும், சிறந்த நீர்ப்பாசன நாகரீகமும் காணப்பட்டன.
இந்த நீர்ப்பாசன நாகரீகமும் விவசாயமும் தற்போது அழிந்து வருகின்றன. என்றாலும் நாம் ஒரு நாடாக மீண்டும் எழுந்து நிற்க வேண்டுமானால் விவசாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இது நமது நாட்டிற்கு டொலர்களை ஈட்ட சிறந்த வழியாகும்.
இது தொடர்பிலான பல யோசனைகளையும் முன்மொழிவுகளையும் இங்கு முன்வைக்கிறேன். இது தொடர்பில் அரசாங்கம் விரைந்து கவனம் செலுத்தும் என நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்