அச்சத்தால் நாட்டை விட்டு வெளியேறிய சஜித்தின் சகோதரி! வெளியான தகவல்
SriLankan Airlines
Sajith Premadasa
SL Protest
Sri Lanka Police Investigation
By pavan
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி நாட்டை விட்டு வெளியேறியதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை எரித்த சம்பவத்தின் போது அவர் அங்கு இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையிலேயே சஜித் பிரேமதாசவின் சகோதரி சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனது இரண்டு பிள்ளைகளுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டமை
கடந்த மாதம் அரசுக்கு எதிராக இடம் பெற்ற போராட்டத்தின் போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி