சஜித்திற்கு லஞ்ச விசாரணை ஆணைக்குழு அழைப்பு
Sajith Premadasa
Sri Lankan Peoples
Bribery Commission Sri Lanka
By Dhilak
லஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பாணையில், ஆணைக்குழுவின் முன் இன்று(27) முன்னிலையாகுமாறே தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக சமிந்த குலரத்ன நியமிக்கப்பட்டது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை தொடர்பிலேயே அவருக்கு இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட திகதி
எவ்வாறாயினும், தான் ஒகஸ்ட் 03 ஆம் திகதி ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகவுள்ளதாக தனது சட்டத்தரணிகள் மூலம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், சமிந்த குலரத்ன தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைவாக கடந்த சில மாதங்ளுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |