தயாசிறியின் கோரிக்கையை அடியோடு நிராகரித்த சஜித் தரப்பு
Parliament of Sri Lanka
Lakshman Kiriella
Dayasiri Jayasekara
By Sumithiran
நாடாளுமன்றில் பேச கால அவகாசம்
கோட்டபாய அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்பட்ட நாற்பத்திரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு மேலும் கால அவகாசம் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கமும் எதிர்க்கட்சியும் தனது அணிக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கை அடியோடு நிராகரிப்பு
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள சுயேட்சைக் குழு ஆதரவளிப்பதால் எதிர்க்கட்சியில் இருந்து கால அவகாசம் வழங்க முடியாது என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உண்மையான எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 20 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி