வருடத்தில் கோடிக்கணக்கில் சம்பளம் : பணிக்கு வர மறுக்கும் மருத்துவர்கள் : எங்கு தெரியுமா..!
மருத்துவர் பணிக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்தும் அவுஸ்திரேலியாவில் (australia)யாரும் வராதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவின் கடற்கரை பகுதிகளை ஒட்டியே நகரங்கள் உள்ள நிலையில் குயின்ஸ்லாந்து போன்ற பகுதிகள் மக்கள் நடமாட்டமில்லா பரப்பாகவே இருந்து வருகிறது.
குயின்ஸ்லாந்து மாகாணம்
இந்த அவுஸ்திரேலியா நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சிறு நகரம்தான் ஜூலியா க்ரீக். குயின்ஸ்லாந்து மாகாண பகுதியில் உள்ள இந்த நகரத்திலும் அதை சுற்றியுள்ள இஷா சிட்டி போன்ற பகுதிகளிலும் குறைவான மக்களே வாழ்ந்து வருவதுடன், முக்கிய நகரங்களுடன் பெரிய தொடர்பு இல்லாமல் நெடுந்தொலைவிற்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இவை உள்ளன.
அதனேலேயே இந்த நகரங்களில் பணிபுரிய பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. ஜூலீயா க்ரீக் பகுதியில் மருத்துவராக பணியாற்ற விருப்பம் உள்ளவர்களுக்கு ரூ.3 கோடி சம்பளம், கார், வீடு என அனைத்து வசதிகளும் அறிவிக்கப்பட்டது.
யாரும் பணிபுரிய முன்வரவில்லை
ஆனாலும் யாரும் அங்கு பணிபுரிய முன்வரவில்லை. இங்கிருந்து நகர்புறத்திற்கு பயணிக்கவே 7 மணி நேரத்திற்கும் மேல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்