சம்பளப் பட்டியலை சமூக வலைதளத்தில் வெளியிட்ட எம்.பி.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான (Jagath Vithana) தனது சம்பளப் பட்டியலை சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
தனது முழு சம்பளத்தையும் சமூகப் பணிகளுக்காகப் பயன்படுத்துவதால் சம்பளப் பட்டியலை வெளியிட முடிவு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சம்பளத்தை ஏற்க வேண்டாம்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முன்பு நான் சம்பளத்தை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்தேன்.
இருப்பினும், பின்னர் நான் சம்பளத்தைப் பெற்று, கருவூலத்தால் பயன்படுத்தப்படுவதை விட அதை முழுவதுமாக சமூக சேவைப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன்.
உண்மையில், எனது சம்பளத்தில் இரு மடங்கு தொகையை சமூகப் பணிகளுக்காகச் செலவிட்டேன். எனது தொகுதியில் உள்ளவர்களுக்கு நான் என்ன செய்கிறேன் என்பது தெரியும்.
நான் ஒரு தொழிலதிபர் என்பதால் எனக்கு சம்பளம் தேவையில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி எங்கும் உயிருடன் விதைக்கப்பட்ட மக்கள் - சர்வதேச தலையீடு அவசியம்: இயக்குனர் டி.ராஜேந்தர் கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினரின் சலுகை
அதன்படி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெறும் அனைத்து சலுகைகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மாதாந்திர கொடுப்பனவு ரூ.54,285, பொழுதுபோக்கு கொடுப்பனவு ரூ.1,000, தொலைபேசி கொடுப்பனவு ரூ. 50,000, அமர்வு கொடுப்பனவு ரூ.5,000.
அலுவலக கொடுப்பனவு ரூ.100,000, எரிபொருள் கொடுப்பனவு ரூ.97,428.92 மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு ரூ.15,000. அவரது நிகர சம்பளம் ரூ.317,760. 39. சம்பளப் பட்டியலின்படி, மாதாந்திர விலக்குகளில் கேட்டரிங் கட்டணமாக ரூ.1,200, தனிநபர் வருமான வரியாக ரூ.3,728.53 ஆகியவை அடங்கும், மேலும் ரூ.25 முத்திரைக் கட்டணமாக கழிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
