தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பு: ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு
தனியார் துறையினரின் குறைந்தபட்ச சம்பளத்தை 25000 ரூபா வரை கொண்டு வருவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுமென எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு காலியில் நேற்று (04) இடம்பெற்ற மக்கள் பேரணியின் போது சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், “எமது நாட்டின் பொருளாதார விருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்குகின்ற தனியார் துறை ஊழியர்களுக்கான பலமான வேலைத் திட்டங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் துறையின் பங்களிப்பு
பொருளாதார விருத்திக்கு தனியார் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். தொழில் வழங்குனர்களின் முதலீட்டைப் போலவே ஊழியர்களும் மிகம் சிரமத்துக்கு மத்தியில் பாரிய பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் பணியிடத்தில் செய்கின்ற உன்னதமான பணிக்காக விஷேட திட்டங்கள் உண்டு.
இதன் ஊடாக தனியார் துறையினரின் குறைந்தபட்ச சம்பளத்தை 25000 ரூபா வரை கொண்டு வருவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும்.
அத்தோடு ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற வகையிலான சேவை கொள்கையும் தயாரிக்கப்படும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |