அதிக விலைக்கு சீமெந்து விற்பனை – வர்த்தக நிலையம் சுற்றிவளைப்பு
Srilanka
Anuradhapura
cement
high prices
Sale
Trade center
B.S.C.P. Pereira
By MKkamshan
அநுராதபுரத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நடத்தப்பட்ட சோதனையில்,அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த வர்த்தக நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டது.
தற்போது சந்தையில் சீமெந்தின் விலை உயர்ந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இந்நிலையிலேயே சந்தையில் சீமெந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நுகர்வோா் அதிகாரசபையின் அநுராதபுரம் காரியாலயத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 சீமெந்து மூடைகள் கைபற்றப்பட்டதாக நுகர்வோா் விவகார அதிகாரசபையின் அநுராதபுரம் மாவட்டத்துக்கு பொறுப்பான விசாரணை அதிகாரி பீ.எஸ்..சீ.பீ. பெரேரா (B.S.C.P. Pereira) தெரிவித்துள்ளாா்.
