மனித பாவனைக்கு உகந்ததற்ற அரிசி விற்பனை: நுகர்வோருக்கு எச்சரிக்கை!
வௌ்ளத்தினால் சேதமடைந்த மனித பாவனைக்கு உகந்ததற்ற அரிசியை விற்பனை செய்யும் மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவா் ப்ரதீப் பொரலெஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, நுகர்வோர் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அதிக அவதானத்துடன் கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துரித இலக்கம்
இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் 24 மணித்தியால துரித இலக்கமான, 1926 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“டித்வா” புயலின் தாக்கத்தினால் நாடளாவிய ரீதியில் பல சேதங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் போது அதில் பல மோசடிகள் இடம்பெறுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலாவதியான அரிசியை விற்பனை செய்தல், உகந்ததல்லாத அரிசியை விற்பனை செய்தல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தல் போன்ற பல விடயங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கொஸ்கம பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் லேபிள்கள் அகற்றப்பட்ட 2400 டின் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |