சுரேஷ் சலே கைது குறித்து உதய கம்மன்பில குற்றச்சாட்டு
முன்னாள் புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஷ் சலே (Suresh Sallay) கைது செய்யப்பட்டமையானது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரிவினைவாத சக்திகளை திருப்திப்படுத்தும் நோக்கத்திலேயே இடம்பெற்றது என உதய கம்மன்பில (Udaya Gammanpila) குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று (25) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொணடு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்கடிக்க சுரேஷ் சலே முக்கிய பங்காற்றியவர். 2023 ஆம் ஆண்டு Channel 4 வெளியிட்ட நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்க நியமித்த குழ
அவரை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என கூறி கதை உருவாக்கப்பட்டதாகவும், அவர் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி A. M. இமாம் தலைமையிலான குழுவின் அறிக்கை வெளிவந்தபோது குறித்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தெரியவந்ததாகவும் கம்மன்பில தெரிவித்தார்.
அந்த அறிக்கையை தற்போதைய ஜனாதிபதி வெளியிடாமல் வைத்திருந்த நிலையில், அதை தாம் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
நிலக்கரி மோசடி
இந்தநிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஏழு ஆண்டுகள் நிறைவடையும் சூழலில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நிலக்கரி மோசடி குறித்த குற்றச்சாட்டுகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பும் முயற்சியாக இது இருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒருவரை குற்றவாளி என சித்தரித்து தண்டிக்க முயன்றால், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க எதிர்க்கட்சி குரல் கொடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |