இலங்கை ஊடக வரலாற்றில் புதிய மைல்கல்! தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சாதனை

Mullaitivu Canada World
By Shalini Balachandran Aug 17, 2026 12:17 AM GMT
Report

இலங்கை ஊடக வரலாற்றில் ஒரே தடவையில் நாட்டின் பல மாவட்டங்களை சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள் , தொலைபேசிகள் வழங்கிய வரலாற்று சாதனையை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் படைத்துள்ளது.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர்களான ஊடகவியலாளர்களுக்கு இலவசமாக இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பு வெள்ளவத்தை தனியார் ஹோட்டலில் நேற்று (16-08-2026) ஆம் திகதி இடம்பெற்றது.

இதில் லண்டனின் பிரபல தொழிலதிபரும் பிரபல சமூகசேவையாளருமான சீவரட்ணம் முறேஸின் நிதி அனுசரணையில் 65 ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகளும் 25 ஊடகவியலாளர்களுக்கு செல்போன்களும் என சுமார் 1.5 கோடி ரூபா மதிப்புள்ள இலத்திரனியல் உபரணங்களை வழங்கி இந்த வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக கிளம்பிய சர்வதேச நாடுகள்...!

இஸ்ரேலுக்கு எதிராக கிளம்பிய சர்வதேச நாடுகள்...!

பிரபல சமூகசேவையாளர்

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஸ்ரீகஜன் மற்றும் செயலாளர் கே.ஜெயந்திரன் ஆகியோர் தலைமையில் நாட்டிய கலைமணி ஸ்ரீமதி பவானி குகப் பிரியாவின் நெறியாள்கையில் தியாகராஜ கலைக்கோவில் மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக லண்டனின் பிரபல தொழிலதிபரும் பிரபல சமூகசேவையாளருமான சீவரட்ணம் முறேஸ் பங்கேற்றார்.

சீவரட்ணம் முறேஸின் இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு ஆளுயர மலர்மாலைகள் மற்றும் தலைக்கிரீடம் அணிவிக்கப்பட்டும் பொன்னாடைகள் போர்த்தப்பட்டதுடன் அவரின் சமூக சேவைகளை பாராட்டி பாராட்டுக் கவிதை காணொளியும் வெளியிடப்பட்டது.

இலங்கை ஊடக வரலாற்றில் புதிய மைல்கல்! தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சாதனை | Tamil Media Union Distributes Laptops Journalists

அவர் தனது உரையின்போது தான் சிறு வயதில் பட்டதுன்பங்கள், வறுமையில் வாடிய தனது தாயார் தன்னை வளர்க்க பட்ட கஷ்டங்களை மிகவும் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தினார்.

சிறப்பு விருந்தினர்களாக எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் பிரைவேட் லிமிட்டெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரியான எம்.செந்தில்நாதன், மூத்த ஊடகவியலாளரும் முரசு பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.வித்தியாதரன், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் த.வீரசுதன் ஆகியோர் பங்கேற்றனர்.

அத்துடன் முன்னாள் பிரதம ஆசிரியர்கள், மூத்த ஊடகவியலாளர்கள் பலரும் பங்கேற்றிருந்த இந்நிகழ்விலேயே லண்டனின் பிரபல தொழிலதிபரும் பிரபல சமூகசேவையாளருமான சீவரட்ணம் முறேஸின் நிதி அனுசரணையில் நாட்டின் பல மாவட்டங்களையும் சேர்ந்த 90 தமிழ் ,முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் தொலைபேசிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதியில்....! மாறும் போராட்ட வடிவம்

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதியில்....! மாறும் போராட்ட வடிவம்

கனடிய குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதில் கடும் தாமதம்...! வெளியான தகவல்

கனடிய குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதில் கடும் தாமதம்...! வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022