கனடிய குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதில் கடும் தாமதம்...! வெளியான தகவல்
கனடா குடியுரிமைச் சான்றிதழ் (Proof of Citizenship) பெறுவதற்கான விண்ணப்பப் பரிசீலனை காலம் 9-10 மாதங்களில் இருந்து 25 மாதங்களாக உயர்ந்துள்ளது.
ஆண்டின் இறுதிக்குள் இது 3 ஆண்டுகளாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கொள்கைகள் மற்றும் பரம்பரை வழியிலான குடியுரிமை வரம்பை நீக்கிய கனடாவின் சட்டத் திருத்தம் (Bill C-3) ஆகியவற்றால், குறிப்பாக அமெரிக்காவில் வாழும் கனடிய வம்சாவளியினரிடமிருந்து விண்ணப்பங்கள் பெருமளவில் குவிந்துள்ளன.
அவசர உதவி
இந்தநிலையில் தற்போது சுமார் 1,21,800 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
அவசர வேலை அனுமதிப் பத்திரம் மற்றும் அவசர உதவி தேவைப்படுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், சாதாரண விண்ணப்பங்களின் தாமதம் மேலும் அதிகரித்துள்ளது.

விண்ணப்பங்கள் சட்டப்படி நியாயமாகவும் முன்னதாக வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் பரிசீலிக்கப்படுகின்றன என்றும், குறிப்பிட்ட கால அவகாசம் என்பது தோராயமான மதிப்பீடே தவிர உத்தரவாதம் அல்ல என்றும் கனடிய குடிவரவுத் துறை (IRCC) தெரிவித்துள்ளது.
நிலுவையிலுள்ள பெருமளவிலான விண்ணப்பங்களை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர கூடுதல் ஊழியர்களைப் பணியமர்த்த வேண்டும் என குடிவரவு வழக்கறிஞர்கள் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |