இஸ்ரேலுக்கு எதிராக கிளம்பிய சர்வதேச நாடுகள்...!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமாதான சபை முன்வைத்த 15 அம்சங்கள் அடங்கிய விரிவான அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தமைக்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து 8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், ஜோர்டான், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய 8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களே இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் நிலைப்பாடு
இஸ்ரேலின் இந்த நிலைப்பாடு அமைதிக்கான விரிவான திட்டத்தை நேரடியாக நிராகரிப்பதாகும்.
இது அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவை பாதிப்பதோடு, நியாயமான மற்றும் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் கூட்டு முயற்சிகளையும் சீர்குலைக்கிறது என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய நிராகரிப்பு மூலம் காசாவிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தின் பிற பகுதிகளிலும் அமைதியைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளைத் தடுக்கும் முழுப் பொறுப்பையும் தற்போது இஸ்ரேலே ஏற்கிறது என்பது உறுதி செய்யப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்தியஸ்தர்களின் தீவிர முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த வழிகாட்டல் வரைபடத்தை பாலஸ்தீன அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
ஆயுதங்களைக் களைதல், இஸ்ரேலியப் படைகளை வாபஸ் பெறுதல், சர்வதேச நிலைப்படுத்தும் படையை அமைத்தல், காசாவின் நிர்வாக அதிகாரத்தை காசா நிர்வாகத்திற்கான தேசியக் குழுவிடம் ஒப்படைத்தல் மற்றும் காசாவை மறுசீரமைத்தல் உள்ளிட்ட முக்கிய நோக்கங்களைக் கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |