ரணிலின் செயலாளருக்கு விளக்கமறியல்!
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இந்நிலையில் விசாரணைகளின் பின்னர் நீதவான் இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று (28) பிற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகைத்தந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பான வழக்கு தொடர்பாக அவர் இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்தார்.
சமன் ஏக்கநாயக்க
முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராக பணியாற்றிய சமன் ஏக்கநாயக்கவை கைது செய்ய காவல்துறை விசாரணைகள் தொடங்கப்பட்டிருந்தது.

மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள லண்டன் சென்ற விவகாரம் தொடர்பான விசாரணையில் சமன் ஏக்கநாயக்கவை கைது செய்ய சட்டமா அதிபரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்ய சென்ற சந்தர்ப்பத்தில் தமது வீட்டில் இருந்து சமன் ஏக்கநாயக்க கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |