இந்திய வெளியுறவுதுறை அமைச்சருக்கு சனத் ஜெயசூரியவின் ‘நன்றி’
இந்தியர்கள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளமைக்கு இங்கையின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சனத் ஜெயசூரிய தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
மாண்புமிகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு சிறப்பு நன்றி.
உதவிக்கு மிகப்பெரிய நன்றிகள்
எங்கள் இருண்ட நேரத்தில் உங்கள் வார்த்தைகளாலும் செயல்களாலும் செய்த உதவிக்கு மிகப்பெரிய நன்றிகள்.
Special thanks to His excellency Indian External Affairs Minister @DrSJaishankar for your support during our darkest time by words and deeds. Also India's support to Sri Lanka Tourism is priceless to us. https://t.co/CZNbHn8hry
— Sanath Jayasuriya (@Sanath07) January 31, 2024
அத்துடன் இலங்கை சுற்றுலாத்துறைக்கு இந்தியாவின் ஆதரவு எமக்கு விலைமதிப்பற்றது என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |