வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் பலி
Sri Lankan Peoples
Death
Sanath Nishantha Accident
Sanath Nishantha
By Dilakshan
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று(25) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சரும் இன்னும் நால்வரும் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும், விபத்தில் உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரி ஜெயக்கொடி என்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் ஆவார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 46 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்