தயவு செய்து மக்களின் துன்பங்களை மறந்துவிடாதீர்கள்! ஜயசூரிய கவலை
20th Amendment
Sanath Jayasuriya
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Kanna
தயவு செய்து மக்களின் துன்பங்களை மறந்துவிடாதீர்கள் என அனைத்து அரசியல்வாதிகளையும் கேட்டுக்கொள்வதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
முகப்புத்தகத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், 20ஆவது திருத்தத்தை நீக்குவது அரசாங்கத்தின் நேர்மைத் தன்மையை அறிந்துகொள்ள பயன்படும் எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, அரசாங்கத்தை மேலும் கடுமையாக சாடிய அவர், புதிய அரசாங்கம் பதவியேற்று இரண்டு வாரங்கள் கடந்த போதிலும் உறுதியான எதுவும் இடம்பெறவில்லை என்பது கவலையளிப்பதாகவும் ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
“எங்கள் மக்கள் இன்னும் வரிசையில் நிற்கிறார்கள். அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், தயவு செய்து மக்களின் துன்பங்களை மறந்துவிடாதீர்கள், ”என்று ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி