தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகவுள்ள சனத்
டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய சூப்பர் 8 போட்டிக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜெயசூரிய விலகுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக குறித்த தொடரின் முடிவில் தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்ததாக ஜெயசூரிய தெரிவித்திருந்தார்.
தலைமை பயிற்சியாளராக தனது ஒப்பந்தம் செல்லுபடியாகும் என்றாலும், போட்டியைத் தாண்டி அந்தப் பதவியில் தொடரும் எண்ணம் தனக்கு இல்லை என்பதை ஜெயசூரிய சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
74 போட்டிகள்
ஜூலை 2024 இல் இந்தியாவுக்கு எதிரான இலங்கை தொடருக்கு ஜெயசூரிய ஆரம்பத்தில் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் அதே ஆண்டின் இறுதியில் முழுநேர தலைமை பயிற்சியாளராக உறுதி செய்யப்பட்டார்.
அவரது பதவிக் காலத்தில், இலங்கை அணி அனைத்து வடிவங்களிலும் மொத்தம் 74 போட்டிகளில் விளையாடி, 34 வெற்றிகளையும் 38 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |