சனி பெயர்ச்சி பலன் 2023 - ஆட்டிப்படைக்கப்போகும் ஏழரை - யாருக்கெல்லாம் கோடீஸ்வர யோகம் தெரியுமா..!
சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வாக்கிய பஞ்சாங்கப்படி நேற்று மார்ச் 29ஆம் திகதி புதன்கிழமை இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார்.
கடந்த ஜனவரி 17ஆம் திகதி திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி நிகழ்ந்த நிலையில், வாக்கிய பஞ்சாங்கப்படி நேற்றைய தினம் சனி பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது.
பொதுவாக சனி பகவான் இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.
இந்த முறை இரண்டே கால் (2 1/4) வருடத்தில் அடுத்த சனிப் பெயர்ச்சி நிகழ்கிறது.
அதாவது திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 17 ஜனவரி 2023 முதல் 29 மார்ச் 2023 வரை சனி பகவான் கும்ப ராசியில் சஞ்சரிப்பார். அதன் பின்னர் கும்பத்திலிருந்து மீன ராசிக்கு செல்வார்.
கர்ம காரகன் என அழைக்கப்படக்கூடிய சனி பகவானின் பெயர்ச்சி, ஜோதிட ரீதியில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நீதி, செயல்பாடு, பலன்கள் இருக்கும். அதில் சனி பகவான் நம் வினைகளுக்கு ஏற்ற நன்மை மற்றும் தண்டனை தரக்கூடிய கிரகமாக செயல்படுவதால், அவரின் கோள்சார அமைப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சனி பெயர்ச்சி பலன் - 2023
நேற்று வாக்கிய பஞ்சாங்கப்படி சனீஸ்வர பகவான் மகர இராசியில் இருந்து கும்ப இராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார்.
காலச் சக்கரத்தின் படி
தனுசு ராசி அன்பர்களுக்கு 7 1/2 சனி காலம் முற்றுப் பெறுகிறது,
மீன ராசிக்கு 7 1/2 வருட சனி காலம் ஆரம்பம்,
மகர ராசிக்கு 2 1/2 வருட பாதச்சனி,
கும்ப ராசிக்கு 5 வருட ஜென்ம சனி,
கடக ராசிக்கு 2 1/2 வருட அஷ்டமச்சனி,
விருச்சிக ராசிக்கு 2 1/2 வருட அர்த்தாஷ்டம சனி,
சிம்மத்திற்கு 2 1/2 வருட கண்டச்சனி காலமாகும்.
எனவே இக்காலத்தில் அனைவரும் சனீஸ்வர பகவானை வணங்குவதோடு சிவன், ஆதி வைரவர், ஆஞ்சநேய பெருமானையும் மனதார பிரார்த்தனை பண்ணுவதால் ஓரளவு சனீஸ்வர பகவானின் பிடியில் இருந்து நிம்மதி அடைய முடியும் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
