சனிப் பெயர்ச்சி 2023 - ஆட்டிப்படைக்கப் போகும் 'அஷ்டமத்து சனி': யாருக்கு விடிவு காலம்

Today Rasi Palan Sani Peyarchi Horoscope Astrology
By Kiruththikan Jan 07, 2023 09:58 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

சனி பகவானின் ஆட்சி வீடு கும்ப ராசி. மகர ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சனிபகவான் கும்ப ராசிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 17ஆம் திகதி இடப்பெயர்ச்சி அடைகிறார்.

இந்த சனி பெயர்ச்சியால் மிதுனம், கடக ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது, வேலை தொழில் எப்படி இருக்கும், பொருளாதார நிலைமை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சனிபகவான் 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். ஜனவரி 30ஆம் திகதி சனி பகவானுக்கு அருகில் சூரியன் வரும் போது அஸ்தமனம் அடைகிறார்.

பாக்ய சனி - அஷ்டமத்து சனி

சனிப் பெயர்ச்சி 2023 - ஆட்டிப்படைக்கப் போகும்

மார்ச் மாதம் 6ஆம் திகதி சனி பகவான் உதயமாகிறார். 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி வக்ர மடையும் சனிபகவான் நவம்பர் 4ஆம் திகதி மீண்டும் நேர்கதியில் பயணம் செய்வார். கும்ப ராசியில் இடப்பெயர்ச்சியாகும் சனிபகவான் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறார்.

பொதுவாகவே சனி பகவான் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி காலங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த சனி பெயர்ச்சியால், மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்ய சனியாக ஒன்பதாம் வீட்டில் சனி அமர்கிறார். கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனியாக பயணம் செய்கிறார்.

சனி பெயர்ச்சியால் மிதுனம், கடக ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது வேலை, தொழிலில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்று பார்க்கலாம்.

மிதுனம்

சனிப் பெயர்ச்சி 2023 - ஆட்டிப்படைக்கப் போகும்

சனி பகவான் மிதுன ராசிக்காரர்களுக்கு 8 மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியாவார்.

கடந்த 5 ஆண்டு காலமாக கண்டச்சனியாகவும் அஷ்டமத்து சனியாகவும் நிறைய கஷ்டங்களையும் படிப்பினைகளையும் கொடுத்து வந்தார் சனிபகவான்.

இனி சனிபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் அமரப்போகிறார். பாக்ய ஸ்தான அதிபதி பாக்ய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு.

2023ஆம் ஆண்டு ஆரம்பம் முதலே உங்களுக்கு அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது. ஒன்பதாம் வீட்டில் ஆன்மீகத்திற்கான இடம். நிறைய ஆலய தரிசனம் செய்வீர்கள்.

முயற்சிகளில் வெற்றி

சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானம், மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானம், ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீது விழுகிறது.

புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள்.

வேலையில் பளு அதிகரிக்கும் என்றாலும் கடின முயற்சியுடன் வேலையை செய்து முடிப்பீர்கள். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

மாணவர்கள் கவனம்

மாணவர்களுக்கு இது அற்புதமான கால கட்டம். ஆசிரியர்களின் உதவியும் ஆசியும் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மூத்த சகோதரரின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள்.

உறவினர்களின் உதவியும் அன்பும் தேடி வரும். ஜூன் மாதத்தில் சனி பகவான் வக்ர மடையும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

வாகன பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. அதிக வேகம் ஆபத்தை தரக்கூடும். வேலை செய்யும் இடத்திலும் நிதானம் அவசியம்

கண்களில் கவனம்

தொழில் வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு மார்ச் முதல் ஜூன் வரை சிறந்த கால கட்டம்.

செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். ஜூன் முதல் நவம்பர் மாதம் வரைக்கும் சனி பகவான் வக்ர நிலையில் செல்வதால் கவனமாக இருப்பது அவசியம்.

கண்கள் தொடர்பான பிரச்சினைகள் வரலாம் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. 2023ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி முதல் சனிபகவான் நேர்கதியில் பயணம் செய்யும் நேரத்தில் உங்களின் பொருளாதார நிலைமை அற்புதமாக இருக்கும்.

உங்கள் ராசிக்கு சனிக்கிழமை தோறும் ஏழைகளுக்கு உணவு தானம் செய்யுங்கள். ஆடை தானம் செய்யுங்கள்.

கடகம்

சனிப் பெயர்ச்சி 2023 - ஆட்டிப்படைக்கப் போகும்

சந்திரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே. உங்கள் ராசிக்கு சனி பகவான் எட்டாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார்.

அஷ்டமத்து சனி காலம் என்பதால் ஆட்டி வைக்குமே என்று அச்சப்பட வேண்டாம். சனி பகவான் எட்டாம் வீட்டில் பயணம் செய்து விபரீத ராஜ யோகத்தை தருவார்.

எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரும் சனி பகவான் நிறைய வேலை பளுவை தரப்போகிறார்.

கவனமாக கையாளுங்கள் யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அதுவே உங்களுக்கு சிக்கலாகி விடும்.

ஓய்வில்லாத வேலை

இந்த கால கட்டத்தில் வேலை வேலை என்று ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருப்பீர்கள்.

உயரதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு பத்து, இரண்டு, 5ஆம் வீடுகளின் மீது விழுகிறது.

பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

திருமண வாழ்க்கையில் இருப்பவர்கள் விட்டுக்கொடுத்துசெல்வது நல்லது. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகும்.

வேலையில் கவனம்

சனி பெயர்ச்சி ஜனவரி 17ஆம் திகதி நிகழ உள்ளது. செய்யும் வேலைகளில் கவனமும் நிதானமும் அவசியம். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய வேண்டாம்.

உணவுகளில் கவனம் தேவை. சரியான சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். எந்த காரியம் செய்வதற்கு முன்பாகவும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

கால்கள், எலும்புகளில் பிரச்சினை வரக்கூடும் கவனம் தேவை. உடற்பயிற்சியும் சூரிய நமஸ்காரமும் செய்வது அவசியம்.

பரிகாரம்

சனி பகவான் 2023ஆம் ஆண்டு ஜூன் முதல் நவம்பர் வரைக்கும் வக்ர கதியில் செல்லும் போது கவனமாக இருப்பது அவசியம். பொருளாதார ரீதியாக சில சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

யாருக்கும் பணத்தை கடனாக கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட்டு பணத்தை வாங்கித்தர வேண்டாம் அதுவே உங்களுக்கு சிக்கலாகி விடும்.

நவம்பர் 4ஆம் திகதிக்கு மேல் புதிய வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு லாபம் கிடைக்கும்.

சோம்பேறித்தனத்தை கைவிடுங்கள். எந்த காரியத்தையும் சுறுசுறுப்பாக உற்சாகமாக செய்து பழகுங்கள் நல்லதே நடக்கும். ச

னிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025