சரத் பொன்சேகாவை பயன்படுத்தி புலிகளை நசுக்க காய் நகர்த்திய சிறிலங்கா அரசு
யுத்த காலத்தில் இராணுவ ரீதியில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு மிகப்பெரிய தேசத்ததை உருவாக்கிய ஒருவர்தான் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka).
தனிப்பட்ட ரீதியில் தமிழ் மக்கள் என்றாலே பாரிய ஒரு வெறுப்பையும் மற்றும் மூர்க்கத்தனமான ஒரு எதிர்ப்பையும் தன்வசம் வைத்திருக்கும் ஒருவர்தான் அவர்.
தமிழ் மக்கள் மீதான வெறுப்பு குறித்து தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு அவர் விளக்கமளித்திருந்தார்.
இது தொடர்பில் தெரிவித்த சரத் பொன்சேகா, தான் சிறுவயதில் தனது பெற்றோருடன் அம்பாறையில் வசித்து வந்த போது அங்கு தமிழர்களினால் தம் பெற்றோர் பாதிக்கப்பட்டதாகவும் அது தமிழர்கள் மீதான ஒரு வெறுப்பை உண்டாக்கியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வெறுப்பை தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக தான் போரில் வெளிக்காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனால், தமிழ் மக்களை மிகவும் வெறுத்த ஒரு இராணுவ அதிகாரியாக சிங்கள மக்கள் மத்தியிலும் மற்றும் சிங்கள இராணுவத்தின் மத்தியிலும் மிகவும் பிரபல்யமானவராக அவர் கருதப்பட்டார்.
இதனை சாதமாக பயன்படுத்தி கொண்ட அப்போதைய அரசாங்கமும் மற்றும் இராணுவமும் விடுதலை புலிகளை வீழ்த்துவதற்காக சரத் பொன்சேகாவை களமிறக்கியது.
இதனால், தமிழ் மக்களின் விடுதலைக்காக என்ற அடிப்படையில் விடுதலை புலிகள் முன்னெடுத்த போராட்டங்களை நசுக்குவதில் மிகவும் மும்முறமாக அவர் செயற்பட்டார்.
அவ்வாறு அவர் முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைகள், யுத்த காலத்தில் சரத் பொன்சேகாவின் முக்கிய நகர்வுகள், தமிழ் மக்கள் மீதான அவரின் அடக்குமுறைகள் மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் விரிவவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
