நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள்! அதிர்ச்சியில் மக்கள் - சரத் பொன்சேகா தகவல்

sri lanka people sarath fonseka
By Shalini Jun 15, 2021 02:15 PM GMT
Report

கொரோனாவால் மக்கள் அதிர்ச்சியில் வாழ்கின்றனர். அரசாங்கத்தின் கட்டுப்படுத்தல் தோல்வி காரணமாக ஏராளமான நோயாளிகள் இன்று பரவலாக நாடு முழுவதும் காணப்படுகிறார்கள், மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தி பற்றி சில ஊடகங்கள் கதைகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, எங்கள் கட்சிக்குள் ஒரு நெருக்கடி நிலவுவதாகவும், கட்சித் தலைவரை ஆதரிக்காத ஒரு தரப்பும் கட்சிக்குள் செயற்படுவதாக என்றும் வதந்திகள் வந்தன.

சம்பிக்க ரணவக்க எங்கள் கட்சியில் பங்குதாரராக இருக்கிறார். அவர் கட்சியை விட்டு செயற்படுவதாக கதைகள் வெளிவந்தன.அவை அனைத்தும் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட கதைகளாகும்.

கட்சிக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நாங்கள் சமீபத்தில் பிரேரனை மூலம் சுட்டிக்காட்டினோம், சம்பிக்க ரணவக்கவும் பிரேரனையை ஆதரித்தார்.

பிரேரனை மூலம் எல்லோரும் கட்சித் தலைவருடன் இருப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. நாங்கள் கட்சியுடன் ஒற்றுமையுடன் செயல்படுகிறோம். பலர் கதைகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

எங்களுக்கிடையில் எந்த நெருக்கடியும் இல்லை. சம்பிக்க ரணவக்கவிற்கு கட்சியில் ஓர் பதவி நிலை வழங்குவது குறித்து இன்றும் நாங்கள் கலந்துரையாடினோம்.

நாங்கள் இன்று சந்தித்து பல விடயங்கள் குறித்தும் நாட்டின் நிலைமை பற்றியும் விவாதித்து ஒரு பெரிய நெருக்கடியைப் பற்றி விவாதித்தோம்.

உர நெருக்கடி குறித்து நாங்கள் நீண்ட விவாதம் நடத்தினோம். அரசாங்கத்தின் மாற்றீடு இல்லாமல் ஒரு தலைபட்சமாக செயற்பட்டமையால் அவதிப்படும் விவசாயிகள் குறித்து சிந்தித்ததோடு,அவர்களின் உருமைகளுக்காக நாங்கள் மக்களுடன் நிற்போம்.

விவசாயிகள் உதவியற்றவர்களாக இருக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இரண்டாவதாக கொரோனா தொற்றுநோய் குறித்தும் அரசாங்கத்தைப் பற்றியும் விவாதித்தோம்.

கொரோனாவால் மக்கள் அதிர்ச்சியில் வாழ்கின்றனர். அரசாங்கத்தின் கட்டுப்படுத்தல் தோல்வி காரணமாக ஏராளமான நோயாளிகள் இன்று பரவலாக நாடு முழுவதும் காணப்படுகிறார்கள், மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நாங்கள் அரசியல் ஆதாயத்தைப் பெறாத வன்னம் எதிர்க்கட்சியாக எமது பங்களிப்பை முறையாக மேற்கொள்கிறோம். அரசாங்கத்தின் எரிபொருள் விலை உயர்வு குறித்து இன்று விவாதித்தோம்.

அரசாங்கத்திற்குள் ஒரு உள்ளக நெருக்கடியை நாங்கள் காண்கிறோம். சிலர் விலையை அதிகரிக்க விரும்புவதைக் காண்கிறோம். சிலர் அதைக் குறைக்கச் சொல்கிறார்கள். என்றாலும் உள்ளக முரன்பாடுகளை விட்டு விட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இன்று அரசாங்கம் உதவியற்ற மீனவர்களுக்கு ரூ.5000 கொடுக்கிறது, ஆனால் அது அரசியல்மயமாக்கப்பட்டு அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

இது பிழையான முன்மாதிரியாகும்.அரசியலுக்கு அப்பால் தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். பேர்ல் எக்ஸ்பிரஸ் கப்பல் தீப்பற்றியதால் மீனவ சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் அவர்களுக்கு நிவாரனம் வழங்க வேண்டும்.கிட்டத்தட்ட 40 கடல் ஆமைகள் இறந்துள்ளன.

இது நமது தேசிய வளமாகும், இது பாதுகாக்கப்பட வேண்டியதும், அதை மீட்டெடுக்க வேண்டியதும் நமது கடமையாகும். இயற்கை வளங்களை கரிசனையோடு கையாள வேண்டும் என்று தெரிவித்தார். 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020